PDF chapter test TRY NOW

கணிதத்தின் ஒரு கிளையான இயற்கணிதம் என்பது ஒரு குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயற்கணித சமன்பாடுகளை தீர்க்கும் மிக முக்கியமான மற்றும் பழமையான முறை ஆகும். \(3\text{-வது}\) நூற்றாண்டில் வாழ்ந்த டையாபாண்டஸ் என்ற கணித மேதை எழுதிய "அரித்மெடிகா" என்பது \(13\) தொகுதிகளைக் கொண்டது அதில் நமக்கு ஆறு மட்டும் எஞ்சியுள்ளது. இப்புத்தகத்தில் அன்றாட வாழ்க்கைக்கான பல தீர்வுகள் அமைந்துள்ளது.
  
Al-Khwarizmi Muslim Scholar.png
 
\(9\text{-ஆம்}\) நூற்றாண்டில் அல்-குவாரிஸ்மி, என்ற பாரசீக கணிதவியலாளர் "(The compendious book of completion by completion and Balancing) "என்ற புத்தகத்தை எழுதினார். இதில் சமன்பாடுகளை தீர்க்க மிகவும் பொருத்தமான முறை கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட புத்தகத்தில் தலைப்பில் உள்ள "அல்-ஜபர்" என்ற வார்த்தையின் மருவியே "அல் ஜீப்ரா" என்ற வார்த்தை உருவானது. எனவே இவர் "இயற்கணிதத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகின்றார்.
 
இந்த தலைப்பின் கீழ் நாம் அன்றாட வாழ்க்கையில் உள்ள புதிர்களை எவ்வாறு தீர்ப்பது என்று உதாரணங்களுடன் அறிந்து கொள்வோம்.