PDF chapter test TRY NOW
விதி I: ஒரு எண் மற்றொரு எண்ணால் வகுபட்டால் அந்த எண்ணின் காரணிகளாலும் வகுபடும்.
Example:
18 மற்றும் 72 என்ற எண்களை எடுத்துக்கொள்வோம்.
இங்கு, 72\div18 = 4
அதாவது, 72 ஆனது 18 ஆல் வகுபடும்.
18 இன் காரணிகள் 1, 2, 3, 6, 9, 18.
தற்போது, 72\div1=72
72\div2=36
72\div3=24,
72\div6=12
72\div9=8
72\div18=4.
இங்கு, 72 ஆனது 18 இன் காரணிகளாலும் வகுபடுவதைக் காணலாம்.
விதி II: ஒரு எண் இரு சார்பகா எண்களால் வகுபட்டால் அதன் பெருக்கற்பலனாலும் வகுபடும்.
Example:
90 ஆனது 5 மற்றும் 9 ஆல் வகுபடும்.
இங்கு, 5 மற்றும் 9 என்பது சார்பகா எண்கள்.
மேலும், (5\times9 = 45).
90\div45 = 2.
எனவே, 90 ஆனது 5 மற்றும் 9 இன் பெருக்கற்பலனான 45 ஆல் வகுபடும் என்பதை அறியலாம்.