PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. விகிதசம விதியைப் பயன்படுத்தி, \(3 : 2\) மற்றும் \(30 : 20\) ஆகியன விகிதச் சமமா என ஆராய்க.
 
விடை:
 
2. ஒரு கணினியைப் பயன்படுத்தி ஒரு படத்தின் அளவு பின்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது.
 
ratio.png
 
படத்தில் வடிவம் மற்றும் அளவில் மாற்றம் உள்ளதை உங்களால் கவனிக்க முடிகிறதா? குறுக்குப் பெருக்கல் முறையைப் பயன்படுத்தி இரு படங்களின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதங்கள், விகித சமத்தில் உள்ளதா என ஆராய்க.
 
விடை:
 
3. பாரி, \(5\) இறகுப் பந்துகளை ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில் வாங்க விரும்புகிறான். ஒரு பெட்டி (\(12\) பந்துகள்) பந்துகளின் விலை \(₹180\) எனில், பாரி \(5\) பந்துகளை வாங்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
 
விடை: பாரி \(5\) பந்துகளுக்கு \(₹\)செலுத்த வேண்டும்.
 
4. ஒரு சூடேற்றி \(40\) நிமிடங்களில் \(3\) அலகுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை அது பயன்படுத்தும்?
 
விடை: \(2\) மணி நேரத்தில் சூடேற்றிப் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவு அலகுகளாகும்.