PDF chapter test TRY NOW

புள்ளி:
ஒரு சமதளப் பரப்பின் மீது குறிப்பிடப்பட்ட ஒரு இடத்தைப் புள்ளி என குறிப்பிடுவோம். இதற்கு நீளம், அகலம் மற்றும் நிறை இல்லை.
dot1w1759.png
 
மேலே உள்ள படத்தில் \(A\) மற்றும் \(B\) என இரண்டு புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
ஒரு புள்ளி என்பது ஒரு கண்ணுக்கு தெரியாத சிறு புள்ளியாகும். இது ஒரு இருப்பிடம்/நிலையை குறிக்கும், ஆனால் இதை நீட்டிக்க முடியாது. இருப்பிடம்/நிலையைக் குறிக்க, ஒவ்வொரு புள்ளியையும் ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி பெயரிடுவோம்.
Example:
நாங்கள் பின்வரும் நிலவரைபடத்தில் ஐந்து இடங்களைக் கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளோம். அவற்றின் இடத்தை \(A\), \(B\), \(C\), \(D\) மற்றும் \(E\) என்ற ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி பெயரிட்டுள்ளோம்.
 
map1 (1).png
கோட்டுத்துண்டு:
ஒரு கோட்டுத்துண்டு என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள குறுகிய தூரம் ஆகும். இது கோட்டின் ஒரு பகுதி. ஒரு கோட்டுத்துண்டிற்கு இரு முனைப்புள்ளிகளைப் பயன்படுத்தி  பெயரிட வேண்டும்.
Line1w1585.png
 
மேலே உள்ள படம் \(PQ\) என்ற கோட்டுத்துண்டைக் காட்டுகிறது. இதை நாம் \(\overline {PQ}\) என எழுதுவோம்.
Example:
இரு இடங்களுக்கிடையே உள்ள தூரத்தைக் அளக்க ஒரு கோட்டுத்துண்டை வரைய திட்டமிட்டுள்ளோம். அவற்றின் இடத்தை \(A\), \(B\), \(C\), \(D\) மற்றும் \(E\) என்ற ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி பெயரிட்டுள்ளோம். 

நாம் \(A\) மற்றும் \(B\) புள்ளிகளை இணைத்தால் \(\overline {AB}\) என்ற கோட்டுத்துண்டு கிடைக்கும்.
 
நாம் \(C\) மற்றும் \(D\) புள்ளிகளை இணைத்தால் \(\overline {CD}\) என்ற கோட்டுத்துண்டு கிடைக்கும்.
 
\(\overline {AB}\) மற்றும் \(\overline {CD}\) அளவுகளைப் பயன்படுத்தி அதன் தூரத்தைக் கணக்கிடலாம்.
 
map2.png