PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கோடுகள்:
ஒரு கோடானது எண்ணற்ற புள்ளிகளைக் கொண்டுள்ளது. ஒரு கோட்டினை இரு திசைகளிலும் முடிவில்லாமல் நீட்ட முடியும்.
Line2.png
 
ஒரு கோடானது பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். கோடு கிடைமட்டமாகவோ, சாய்வாகவோ அல்லது செங்குத்தாகவோ இருக்கலாம். இரண்டு புள்ளிகள் \(A\) மற்றும் \(B\) வழியே செல்லும் கோட்டினை \(\overleftrightarrow {AB}\) அல்லது \(\overleftrightarrow {BA}\) என்று எழுதலாம். மேலும், இதை \(m\) என்ற எழுத்தால் குறிப்பிடலாம்.
Example:
கீழே கொடுக்கப்பட்டுள்ள படமானது \(200\) மீட்டர் ஓட்டப்பந்தயத் தடகளம். இத்தடகளம் ஒரு நிலையான தொடக்க மற்றும் முடிவு புள்ளிகள் இல்லாமல் இரு திசைகளிலும் எல்லையில்லாமல் நீண்டு செல்லும் ஒரு களமாக இருக்கிறது. இது கோட்டிற்கான உதாரணம்.
 
run.png
கதிர்:
ஒரு கோட்டின்  ஒரு முனை முடிவுற்றும் அடுத்த முனை முடிவுறாமலும் இருந்தால், அதனை நாம் கதிர் என அழைக்கிறோம். ஒரு கதிரின் முடிவுறுப் புள்ளியை தொடக்கப் புள்ளி என்கிறோம்.
Rayw1325.png
 
Important!
ஒரு கதிரின் பெயரை தொடக்கப்புள்ளியில் ஆரம்பித்து முடிவுறா பகுதியின் எழுத்தில் முடிக்க வேண்டும். மேலே உள்ள கதிரின் பெயர் \(\overrightarrow{AB}\). இதனை \(\overrightarrow{BA}\) என்று எழுதக்கூடாது.
Example:
நம்மிடம் ஒரு மின்விளக்கு (torch) உள்ளது. இதன் ஒளி (கோட்டுத்துண்டு) எதிர் திசையை நோக்கி ஒரு நேர் கோட்டில் பயணிக்கிறது. அந்த ஒளியின் முடிவு நமக்குத் தெரியாததால், ஒரு நிலையான புள்ளியிலிருந்து வரும் இந்த கோட்டுத்துண்டை கதிர் என்று கூறுவோம்.
 
torch.png