PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இணைக்கோடுகள்:
இரண்டு கோடுகள் எந்தவொரு புள்ளியிலும் சந்திக்காமல் ஒரே தூரத்தைக் கொண்டிருந்தால், அவை "இணைக்கோடுகள்" என்று அழைக்கப்படுகின்றன.
Parallw2338.png
Example:
Shelves.png
 
இங்கு அலமாரியில் உள்ள அடுக்குகள் ஒன்றுக்கொன்று இணையாக இருப்பதை நாம் காணலாம். இது இணைக்கோடுகளுக்கான உதாரணம்.
வெட்டும் கோடுகள்:
இரண்டு கோடுகள் ஒன்றையொன்று வெட்டி ஒரு பொதுவான புள்ளியைப் பகிர்ந்து கொண்டால், அவ்விரண்டு கோடுகளும் "வெட்டும் கோடுகள்" என்று அழைக்கப்படுகின்றன. அந்த பொதுவான புள்ளியானது "வெட்டும் புள்ளி" எனப்படுகிறது.
inter.png
 
இங்கே, \(AB\) மற்றும் \(CD\) என்ற இருகோடுகளும் \(O\) என்ற புள்ளியில் வெட்டிகொள்கின்றன. எனவே, இவை வெட்டும் கோடுகள் என்றழைக்கப்படுகின்றன.
Example:
Scissor.png
 
கத்தரிக்கோலில் உள்ள உலோக கத்திகள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டுவதை நாம் காணலாம். இது வெட்டும் கோடுகளுக்கான ஒரு உதாரணம்.