PDF chapter test TRY NOW

சுடோகு:
'சுடோகு' என்ற சொல்லானது ஜப்பானிய மொழியிலிருந்து வந்தாகும்.
 
இதில் ‘சு’ என்பதற்கு ‘எண்’ என்றும் ‘டோகு’ என்பதற்கு ‘ஒற்றை’ என்றும் பொருள். அதாவது இதில் உள்ள கிடைமட்ட மற்றும் செங்குத்து வரிசையில் உள்ள கட்டங்களில் உள்ள எண்கள் ஒரு தடவை மட்டுமே வருதல் வேண்டும்.
 
 நவீன சுடோகுவைக் கண்டறிந்தவர் ஹாவர்டு கார்ன்ஸ். இவர் அமெரிக்காவைச் (இண்டியானா) சேர்ந்த \(74\) வயது கட்டடக் கலைஞர். இந்தச் சுடோகு  \(1979\) இல் வெளியிடப்பட்டது.
 
.2 (1).png
\(3×3\) சுடோகு விதி: ஒவ்வொரு வரிசையிலும் நெடுவரிசையிலும் \(1−3\) எண்களை சரியாக ஒருமுறை நிரப்ப வேண்டும் என்பதே சுடோகுவின் விதிமுறையாகும்.
\(3×3\) சுடோகுவைத் தீர்ப்பதற்கான விதிகள்:
  • \(3\) வரிசைகள் மற்றும் \(3\) நெடுவரிசைகள் உள்ளன.
  • ஒவ்வொரு வரிசையும் \(1, 2\) மற்றும் \(3\) இலக்கங்களுடன் சரியாக ஒரு முறை வைக்கப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு நெடுவரிசையிலும் \(1-3\) என்ற ஒவ்வொரு இலக்கமும் சரியாக ஒருமுறை இருக்கும்.