PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. மலர் கணிதத்தில் மதியை விட \(10\) மதிப்பெண் அதிகமாக எடுத்துள்ளார். இந்த வாக்கியத்தை மாறியைப் பயன்படுத்தி எழுதுக.
 
விடை:
 
மதி எடுத்த மதிப்பெண் நமக்குத் தெரியாது, அதை \(x\) என எடுத்துக் கொள்வோம்.
 
மலர் பெற்ற மதிப்பெண் \(=\) மதியை விட \(10\) மதிப்பெண் அதிகம்
 
\(=\) \(x + 10\)
 
எனவே, \(x + 10\) என கொடுக்கப்பட்ட வாக்கியத்தை எழுதலாம்.
 
 
2. எழில் அவனது சகோதரி கவிதாவை விட \(5\) வயது சிறியவர். கவிதாவின் வயது தெரிந்தால் எழிலின் வயதை கணக்கிட முடியுமா?
 
விடை:
 
கவிதாவின் வயது நமக்குத் தெரியாது, அதை \(m\) என எடுத்துக் கொள்வோம்.
 
எழிலின் வயது \(=\) கவிதாவை விட \(5\) வயது சிறியவர்
 
\(=\) \(m - 5\)
 
உதாரணமாக, கவிதாவின் வயது \(9\) எனில், எழிலின் வயது \(9 - 5 = 4\) ஆகும்.
 
கவிதாவின் வயது \(18\) எனில், எழிலின் வயது \(18 - 5 = 13\) ஆகும்.
 
கவிதாவின் வயது மாற மாற எழிலின் வயதும் மாறும். எனவே, கவிதாவின் வயது தெரிந்தால் எழிலின் வயதை நம்மால் கணக்கிட முடியும்.