PDF chapter test TRY NOW

பழங்காலத்தில் பயன்படுத்தப்படும் அளவீடுகள்:
பழங்காலத்தில் மக்கள் பூக்கள், நெல், தினை, துணி போன்றவற்றை அளவிட படி, உழக்கு, அழகு, மரக்கால், அடி, சாண், முழம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். ஆனால் இந்த அளவைகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. ‘அரசரின் காலடி’, ‘அரசரின் கை’ மற்றும் 'யார்டு’ போன்றவற்றை, குறைந்த தொலைவுகளை அளப்பதற்குரிய நிலையான அளவுகளாகப் பயன்படுத்தினார்கள். அனைத்து இடங்களிலும், இவை தவிர்க்க முடியாத அளவைகளாகப் பயன்பாட்டில் இருந்தன. தரப்படுத்தப்பட்ட அளவீடுகள்மெட்ரிக் அளவீடுகள் என்று அழைக்கப்படுகின்றன. \(1971\) ஆம் ஆண்டு நடந்த எடைகள் மற்றும் அளவைகள்’ பொது மாநாட்டில் பொதுவான மெட்ரிக் அளவைகள் வரையறுக்கப்பட்டன.
நவீன நாட்களில் பயன்படுத்தப்படும் அளவீடுகள்:
நீளத்தை அளவிட, கிலோமீட்டர், மீட்டர், சென்டிமீட்டர் மற்றும் மில்லிமீட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.
 
shutterstock_1074030605.jpg
எடையை அளவிட, நாம் கிலோகிராம், கிராம் மற்றும் மில்லிகிராம்  ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.
 
shutterstock_431559736.jpg
கொள்ளளவை அளவிட , நாம் கிலோ லிட்டர், லிட்டர் மற்றும் மில்லிலிட்டர்  ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்..
 
shutterstock_148939844.jpg
நேரத்தை அளவிட, நாம் வினாடிகள், நிமிடங்கள் மற்றும் மணிநேரங்களைப் பயன்படுத்துகிறோம்.
 
shutterstock_1091811029.jpg
Important!
மீட்டர், லிட்டர், கிராம் மற்றும் வினாடிகள் அடிப்படை மெட்ரிக் அலகுகள் ஆகும். இந்த அலகு மாற்றங்கள் தசம அமைப்பு \((10)\) இன் அடிப்படையிலானது.