PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு முப்பரிமாண பொருளை கிடைமட்டமாகவோ அல்லது செங்குத்தாகவோ வெட்டும்போது நாம் பெறும் வடிவமே அப்பொருளின் குறுக்குவெட்டுத் தோற்றம் ஆகும்.
கூம்பின் குறுக்குவெட்டுத் தோற்றம்:
 
2.gif
இரண்டு வகையான குறுக்குவெட்டுத் தோற்றங்கள் உள்ளன. அவை:
  • கிடைமட்ட குறுக்குவெட்டுத் தோற்றம்
  • செங்குத்து குறுக்குவெட்டுத் தோற்றம்
கிடைமட்ட குறுக்குவெட்டுத் தோற்றம்:
 
ஒரு திண்ம வடிவத்தை ஒரு சமதளவுரு கிடைமட்டமாக வெட்டும் போது கிடைக்கும் உருவமே கிடைமட்ட குறுக்குவெட்டுத் தோற்றம்.
 
எ .கா: உருளையை கிடைமட்டமாக வெட்டும்போது வட்டம் கிடைக்கும்.
 
செங்குத்து குறுக்குவெட்டுத் தோற்றம்:
 
ஒரு திண்ம வடிவத்தை ஒரு சமதளவுரு செங்குத்தாக (நேராக)வெட்டும் போது கிடைக்கும் உருவமே செங்குத்து குறுக்குவெட்டுத் தோற்றம்.
 
எ .கா: உருளையை செங்குத்தாக வெட்டும்போது செவ்வகம் கிடைக்கும்.
 
கிடைமட்ட குறுக்குவெட்டுத் தோற்றம்
செங்குத்து குறுக்குவெட்டுத் தோற்றம்
4_10.png5_9.png
சில முப்பரிமாண வடிவங்களும் அதன் கிடைமட்ட குறுக்குவெட்டுத் தோற்றங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
6_2.png