PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நினைவு கூர்தல் : (சேர்ப்பு கணம் மற்றும் வெட்டு கணம்)
 
சேர்ப்பு கணம்:
இரு கணங்கள் \(A\)மற்றும் \(B\)இன் சேர்ப்பு கணம் என்பது, கணங்கள் \(A\)அல்லது \(B\) அல்லது
இரண்டிலும்  உள்ள  உறுப்புகளைக் கொண்ட கணம் ஆகும். இதை \(A\cup B\) எனக் குறிப்பிடலாம் .
\( A∪B\) \(=\) \(\{\)\(x\) :\(x\) \(∈\) \(A\) அல்லது \(x\)\(∈\)\(B\) \(\}\)
வெட்டு கணம் :
இரு கணங்கள் \(A\)மற்றும்\(B\)இன் வெட்டு கணம் என்பது, கணங்கள் \(A\) மற்றும்  \(B\) யின்  பொது உறுப்புகளைக் கொண்ட கணமாகும். இதை \(A∩B\)எனக் குறிப்பிடலாம்.
\(A∩B\) \(=\) \(\{\) \(x\):\(x\) \(∈\) \(A\) மற்றும் \(x\) \(∈\) \(B\) \(\}\)
இரு கணங்களின் சேர்ப்புக்கான பரிமாற்றுப் பண்பு: 
இரு கணங்களின்  சேர்ப்பானது ,அவற்றின் இடங்களை மாற்றினாலும் மாறாது.
\(A\cup B\) \(=\) \(B \cup A\)
எடுத்துக்காட்டாக,
 
\(A\) \(=\) \(\{\)\(2\), \(3\), \(5\), \(7\)\(\}\) மற்றும் \(B\) \(=\) \(\{\)\(4\), \(6\), \(8\), \(10\)\(\}\)
 
\(A \cup B\) \(=\) \(\{\)\(2\), \(3\), \(5\), \(7\)\(\}\) \(\cup\) \(\{\)\(4\), \(6\), \(8\), \(10\)\(\}\)
 
\(A \cup B\) \(=\) \(\{\)\(2\), \(3\), \(4\), \(5\), \(6\), \(7\), \(8\), \(10\)\(\}\)
 
\(B \cup A\) \(=\) \(\{\)\(4\), \(6\), \(8\), \(10\)\(\}\) \(\cup\) \(\{\)\(2\), \(3\), \(5\), \(7\)\(\}\)
 
\(B \cup A\) \(=\) \(\{\)\(2\), \(3\), \(4\), \(5\), \(6\), \(7\), \(8\), \(10\)\(\}\)
 
மேற்கண்ட கூற்றில் இருந்து,
 
\(A \cup B\) \(=\) \(B \cup A\).
 
இரு கணங்களின் வெட்டிற்கான பரிமாற்றுப் பண்பு:
இரு கணங்களின் வெட்டனாது ,அவற்றின் இடங்களை மாற்றினாலும் மாறாது.
\(A\cap B\) \(=\) \(B \cap A\)
எடுத்துக்காட்டாக,
 
 \(A\) \(=\) \(\{\)\(3\), \(5\), \(8\), \(9\), \(10\)\(\}\) மற்றும்  \(B\) \(=\) \(\{\)\(4\), \(5\), \(7\), \(10\)\(\}\)
 
\(A \cap B\) \(=\) \(\{\)\(3\), \(5\), \(8\), \(9\), \(10\)\(\}\) \(\cap\) \(\{\)\(4\), \(5\), \(7\), \(10\)\(\}\)
 
\(A \cap B\) \(=\) \(\{\)\(5\), \(10\)\(\}\)
 
\(B \cap A\) \(=\) \(\{\)\(4\), \(5\), \(7\), \(10\)\(\}\) \(\cap\) \(\{\)\(3\), \(5\), \(8\), \(9\), \(10\)\(\}\)
 
\(B \cap A\) \(=\) \(\{\)\(5\), \(10\)\(\}\)
 
மேற்கண்ட கூற்றில் இருந்து,
 
\(A \cap B\) \(=\) \(B \cap A\)
Important!
இரு கணங்களின் மதிப்பானது அவற்றின் இடங்களை மாற்றினாலும் மாறாது. இதுவே பரிமாற்றுப்பண்பு ஆகும்.