PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மாறியின் அடுக்குகளில் பெரிய மதிப்பு பல்லுறுப்புக் கோவையின் படி ஆகும்.
p(x)=9x3 3x2 +8x  2 என்ற பல்லுறுப்புக் கோவையில், மாறியின் பெரிய அடுக்கு \(3\).
 
p(x)=3x2 +8x  2 என்ற பல்லுறுப்புக் கோவையில், மாறியின் பெரிய அடுக்கு \(2\).
 
படியைப் பொறுத்து பல்லுறுப்புக் கோவையின் வகைகள்: 
  • ஒரு படி பல்லுறுப்புக் கோவை: பல்லுறுப்புக் கோவையின் படி ஒன்று எனில் அது ஒருபடி பல்லுறுப்புக் கோவை எனப்படும் — p(x)=8x – 2.
  • இருபடி பல்லுறுப்புக் கோவை:  பல்லுறுப்புக் கோவையின் படி இரண்டு எனில் அது இருபடி பல்லுறுப்புக் கோவை எனப்படும் — p(x)=3x22.
  • முப்படி பல்லுறுப்புக் கோவை :  பல்லுறுப்புக் கோவையின் படி மூன்று எனில் அது முப்படி பல்லுறுப்புக் கோவை எனப்படும் \(3\) — 2x35.
Important!
அதிகபட்சமாக ஒரு படி பல்லுறுப்புக் கோவையில் \(2\) உறுப்புகளும், இருபடி பல்லுறுப்புக் கோவையில் \(3\) உறுப்புகளும், முப்படி பல்லுறுப்புக் கோவையில் \(4\) உறுப்புகளும் இருக்க வேண்டும். 
படியைப் பொறுத்த பல்லுறுப்புக் கோவையின் பொது வடிவம். 
  • ஒருபடி பல்லுருப்புக் கோவை:  p(x)=ax+b.
  • இருபடி பல்லுறுப்புக் கோவை: p(x)=ax2+bx+c.
  • முப்படி பல்லுறுப்புக் கோவை: p(x)=ax3+bx2+cx+d.
பூச்சிய பல்லுறுப்புக் கோவையின் படியை வரையறுக்க இயலாது.
 
பூச்சியமற்ற மாறிலி பல்லுறுப்புக் கோவையின் படி பூச்சியம்.