PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இடமதிப்பு என்பது ஒரு எண்ணுரு அது இடம்பெற்றிருக்கும் எண்ணில் எந்த இடத்தில் இருக்கிறதோ அதற்கு ஏற்ற மதிப்பைப் பெறும். எடுத்துக்காட்டாக \(3\) என்ற எண்ணுரு, இடம்பெற்றிருக்கும் இடத்தை பொருத்து அதன் மதிப்பு அமைகிறது.
இட மதிப்பு  என்பது கொடுக்கப்பட்ட எண்ணிற்குரிய இடத்தின் மதிப்பை குறிக்கிறது.
 
எடுத்துக்காட்டு :
 
ஒரு இலட்சத்தில் எத்தனை ஆயிரங்கள் உள்ளன?
 
தீர்வு:
 
இடமதிப்பு
இல
பஆ
 நூ 
 
\(1\) இலட்சம்\(1\)\(0\)\(0\)\(0\)\(0\)\(0\)\(1\) இலட்சம் / \(1\) ஆயிரம் \(= \frac{100000}{1000}\) = 100\) 
\(1\) ஆயிரம்  \(1\)\(0\)\(0\)\(0\) 
 
இலட்சமானது ஆயிரத்திலிருந்து \(2\) இடங்கள் இடப்புறமாக உள்ளது. இது \(10 \times 10 = 100\) முறை ஆயிரங்கள் ஆகும். எனவே, \(1\) இலட்சம் \(= 100\) ஆயிரங்கள் ஆகும்.
 
எடுத்துக்காட்டு :
 
எண்ணுருவை விரிவாக்கம் செய்து படிக்கவும் : \(50000\)
 
எண்ணுரு : \(50,000\)
 
விரிவாக்க வடிவம் : \(5 \times 10000\)
 
படித்துக்காட்டுதல் : ஐம்பதாயிரம்

எண்ணுருவை விரிவாக்கம் செய்து படிக்கவும் : \(676097\)
 
எண்ணுரு : \(6,76,097\)
 
விரிவாக்க வடிவம் : \(6 \times 100000 + 7 \times 10000 + 6 \times 1000 \times + 0 \times 100 + 9 \times 10 + 7 \times 1\)
 
படித்துக்காட்டுதல் : ஆறு இலட்சத்து எழுபத்து ஆறாயிரத்து தொண்ணூற்று ஏழு.
Important!
பின்வருவனவற்றை நினைவுகூருங்கள்:
 
\(1\) பத்துகள் \(=10\) ஒன்றுகள்.
\(10\) பத்துகள் =1\) நூறுகள் \(=100\) ஒன்றுகள்.
\(1\) ஆயிரம் \(= 10\) நூறுகள் \(= 100\) பத்துகள்.
\(1\) லட்சம் \(= 100\) ஆயிரம் \(= 1000\) நூறுகள்.
\(1\) கோடி \(= 100\) லட்சம் \(= 10,000\) ஆயிரம்.